நான் பாண்டிச்சேரி ITI இல் படித்தபோது நடந்த வேடிக்கையான சம்பவம் இது. நாங்கள் படித்த கம்ப்யூட்டர் கோர்ஸ்ஸின் பெயர் COPA (Computer Operator and Programming assistant). இந்த படிப்பை முடித்து தேர்வு முடிவுகள் வந்து இருந்த நேரம், இந்த ஒருவருட படிப்பை முடித்ததும், அனைவருக்கும் ஒரு சர்டிபிக்கேட் தருவார்கள் அதை கொண்டுபோய் Employment Exchangeஇல் பதியவேண்டும் என்று கூட படித்த நான்பர்களின் அழைப்பின் பேரில், நாங்கள் அனைவரும் அன்று பிரின்சிபால் அறையின் முன்னால் நின்றுக்கொண்டு இருந்தோம்.
சர்டிபிக்கேட்டை பெறுவதற்கு ஒரு லெட்டெர் தரவேண்டும் என்று அந்த பக்கம் வந்த ஒரு பியுன் சொன்னார், என்ன லெட்டர் என்று கேட்டதற்கு ஏதோ ப்ரொபெசினல் லெட்டெர் அப்படினு சொல்லிட்டு போயிட்டார். அந்த கூட்டத்துல நான்தான் கொஞ்சம் இங்கலிஷ் தேரிஞ்சவன் அப்படினு நம்பி மற்ற நண்பர்கள் என்னை லெட்டெர் எழுதி தர சொன்னார்கள், நானும் ரொம்ப பெருமைய ப்ரின்சிபாலுக்கு to போட்டு லெட்டெர் எழுதி கொடுத்துக்கொண்டு இருந்தேன்.
முதலில் வாங்கி சென்ற நண்பன் என்னை பிரின்சிபால் இந்த லெட்டெர் எழுதியதற்காக கூப்பிடுகின்றார் என்றான், நானும் பெருமையாய் பிரின்சிபால் முன்னால் போய் நின்றேன், இந்த லெட்டரை நீதான் எழுதனத என்று கேட்டார் நானும் எஸ் சார் என்று சொன்னேன் உடனே அவர் நீங்க படிச்சது ஒரு சர்டிபிகேட் கோர்ஸ் அதற்கு எதற்கு நாங்க உங்களுக்கு Professional Certificate தரனும், Engineering படிச்சா பசங்களுக்கே அப்படி யாரும் தரத எனக்கு தெரியல ஆன உங்களுக்கு வேணும் அப்படினு ஒருமாதிரியாக என்னை பார்த்தார்.
எனக்கும் எதுவும் புரியல நான் உடனே சார் பியுன் தான் இப்படி ஒரு லெட்டெர் கொடுத்தான் சர்டிபிகேட் தருவீங்கன்னு சொன்னார் அப்படினு சொன்னேன். உடனே பிரின்சிபால் என்னை பார்த்து சிரிச்சபடி அது Professional Certificate இல்ல Provisional Certificate அப்படினு சொன்னார். எனக்கு என் ஆங்கில புலமையை நினைத்து வெட்கமாக இருந்தது அதைவிட என்னை நம்பன நண்பர்களை நினைச்சாதான் ரொம்ப பாவம இருந்துச்சி.
குறிப்பு:
இது என் முதல் தமிழ் பதிவு அதனால் இலக்கண பிழை மற்றும் எழுத்து பிழைகளை பொறுத்துக்கொள்ளவும்.
அன்புடன்
இளம்பரிதி
No comments:
Post a Comment